கம்பஹா மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ஏழரை கோடி ரூபா பெறுமதியான பணத்தை நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனமொன்றில் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது வாகனத்தின் சாரதியாகக் கடமையாற்றிய நபரொருவர் , ஊழியர்கள் வாகனத்திலிருந்து வெளியே இறங்கிய வேளையில் பணத்தை எடுத்துக் கொண்டு அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், இந்த வாகனம் கம்பஹா, உக்கல்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் சாரதியாகக் கடமையாற்றிய பிரதான சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டிருந்த நிலையில் இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கம்பஹா பொலிஸ் நிலையத்தின் 071 859 1608 அல்லது 071 859 1610என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM