நாட்டில் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவை அதிகளவு பரவி வருவதாக சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
சிறுவர்களிடையே இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி போன்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் தென்படுகின்றன.
சிறுவர்களிடையே குறிப்பாக காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், நோய் அறிகுறிகளை உன்னிப்பாகக் அவதானித்து பெற்றோர்கள் வைத்தியர் உதவியை நாட வேண்டும்.
தற்போது பாடசாலை மாணவர்களிடையே கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) பரவி வருகிறது.
சிறுவர்களின் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில், வாயைச் சுற்றி அல்லது மேல் பிட்டங்களில் சிறிய நீள்வட்ட வடிவில் வெள்ளை கொப்புளங்கள், அதே போல் வாயில் பழுப்பு அல்லது சிவப்பு தோல் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கின்றதா என பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும்.
இந்த அறிகுறிகளில் சில இன்ப்ளூயன்ஸாவின் அறிகுறிகளைப் போலவே இருப்பதாக பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
டெங்கு காய்ச்சலை கண்டறிய இரத்த பரிசோதனையும் செய்ய வேண்டும்.
டெங்கு காய்ச்சல் இறப்பு விகிம் 0.1 சதவீதம் அபாயகரமான சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதற்கு சிறப்பு கவனம் தேவை
பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பதோடு, தங்கள் பிள்ளைகளுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM