மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டு வர புதிய அரசாங்கம் ஒரு புதிய பாதையாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் எதிர்கால செயற்பாடுகளை நம்பிக்கையோடு கொண்டு செல்ல இந்த பொதுத் தேர்தல் ஒரு முக்கிய பலமாக இருந்தது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிகபட்ச வாக்குகளை வென்று ஆட்சியைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு எனது வாழ்த்துக்கள்.
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டு வர இந்த புதிய அரசாங்கம் ஒரு புதிய பாதையாகும்.
நாட்டில் நிலவும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இந்த மாபெரும் வெற்றியைப் பயன்படுத்துங்கள்.
அத்துடன் புதிய அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு வழங்கப்படும்.
புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட நாம் ஒரு போதும் மறுப்பு தெரிவிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM