IDM நேஷன் கம்பஸானது இங்கிலாந்தின் சௌத்தெம்டன் ஷெலன்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கையில் உள்ள மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான கருத்தரங்கொன்று இலங்கை மன்றக் கல்லூரியில் IDM நேஷன் கம்பஸின் தலைவர் கலாநிதி வி. ஜனகனின் தலைமையில் திங்கட்கிழமை (18) இடம்பெற்றது.
இலங்கையில் பாடசாலை கல்வியை நிறைவுசெய்த மாணவர்கள் இங்கிலாந்தின் சௌத்தெம்டன் ஷெலன்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்களை முன்னெடுப்பது குறித்தும் அங்குள்ள கற்கை நெறிகள் குறித்தும் இங்கிலாந்தின் சௌத்தெம்டன் ஷெலன்ட் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச மாணவர்களை உள்வாங்கும் சிரேஷ்ட அதிகாரி நேஹா கொல்கர் சௌத்திரி தெளிவுபடுத்தினார்.
இதன்போது மாணவர்கள் கற்கைநெறிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பி நேரடியான புரிதல்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் IDM நேஷன் கம்பஸின் பணிப்பாளர், வட பிராந்திய பணிப்பாளர், முகாமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM