கைத்துப்பாக்கி, 143 தோட்டாக்களுடன் கைதான முன்னாள் இராணுவ வீரரிடம் விசாரணை

19 Nov, 2024 | 01:39 PM
image

கைத்துப்பாக்கி மற்றும் 143  தோட்டாக்களுடன்   கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம்  மேலதிக விசாரணைகள் பல கோணங்களில்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்ட நபர் பின்னர் கினியாகல  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அம்பாறை விசேட அதிரடிப் படை  புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில்  இகினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வாவின்ன  பரகஹகலே பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து  வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள்  மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை தம்வசம் வைத்திருந்த சந்தெக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த கைதான சந்தேக நபர் 51 வயது மதிக்கத்தக்க முன்னாள் ஓய்வுபெற்ற இராணுவ சிறப்புப் படை வீரர் என்பதுடன் அவரது வீட்டு  காணியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 9 எம்.எம்  துப்பாக்கி மற்றும் 143  தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மீட்கப்பட்ட துப்பாக்கியின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் தொடர்பிலும் அவர் வசம் மீட்கப்பட்ட  துப்பாக்கி தொடர்பிலும்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சந்தேநக நபர் குறித்த துப்பாக்கியை   போர் நடைபெற்ற வேளை வட பகுதயில்  கடமையில் இருந்து எடுத்து வந்தாரா அல்லது விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா அல்லது இராணுவ களஞ்சிய சாலையில் இருந்து பெறப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா அல்லது பல்வேறு குற்றச் செயலுக்காக எடுத்து வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? என பல கோணங்களில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56