தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது !

Published By: Digital Desk 2

19 Nov, 2024 | 11:01 AM
image

தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கித் தாரி உட்பட இருவர் நேற்று திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர் தெஹிவளையில் பிரதேசத்தைச் சேர்ந்த அனுர கோஸ்தா என்பவர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   

போதைப்பொருள் கடத்தல் காரர்களும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களுமான படோவிட்ட கொஸ் மல்லி மற்றும் படோவிட்ட அசங்க ஆகிய இருவருக்கு இடையில் ஏற்பட்ட போதைப்பொருள் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் , பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரும் அத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரும் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் , துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் கடத்தல் காரரின் நண்பன் ஹெரோயினுடன்...

2025-03-20 13:02:07
news-image

ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின்...

2025-03-20 12:40:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-20 12:23:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய...

2025-03-20 12:06:24
news-image

கணேமுல்ல பகுதியில் சட்டவிராத மதுபானத்துடன் ஒருவர்...

2025-03-20 12:03:15
news-image

வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பாவனை

2025-03-20 12:10:51
news-image

யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில்...

2025-03-20 11:35:39
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-03-20 11:21:27
news-image

update ; பாதுக்கையில் ரயில் -...

2025-03-20 11:13:51
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 10:53:51
news-image

தம்புள்ளையில் விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்...

2025-03-20 10:51:29
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் ரணில்விக்கிரமசிங்க...

2025-03-20 10:49:50