ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2- தி ரூல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி எதிர்பார்த்ததை விட கூடுதலாக இணையத்தை ஸ்தம்பிக்க வைத்து முன்னணியில் இருக்கிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2- தி ரூல்' எனும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாஸில், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த முன்னோட்டத்தில் 'புஷ்பா என்பது பேரில்ல பிராண்ட் ' போன்ற அழுத்தமான வசனங்களும், வித்யாசமான எக்சன் காட்சிகளும், கவரக்கூடிய காதல் காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் ஆதரவு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக இந்த 'புஷ்பா 2' திரைப்படத்தின் தமிழ் மொழியிலான முன்னோட்டத்திற்கு நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குறுகிய கால அவகாசத்திற்குள் பார்வையிட்டு சாதனை படைத்திருக்கிறார்கள்.
மேலும் புஷ்பா 2 திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியான முன்னோட்டம் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM