சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்ற கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் 'காந்தாரா அத்தியாயம் 1' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'காந்தாரா அத்தியாயம் 1 ' எனும் திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஓக்டோபர் மாதம் 2-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர் .
கொங்கனி எனும் மொழியை பேசும் மக்களின் வாழ்வியலை தழுவி தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
2022 ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியான வெற்றியை பெற்றதுடன் தேசிய விருதையும் வென்ற 'காந்தாரா' திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி நடிப்பில் தயாராகும் இந்த 'காந்தாரா :அத்தியாயம் 1' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரிஷப் ஷெட்டி - கேரள மாநிலத்தின் பாரம்பரியமிக்க தற்காப்பு கலையான களரிபயாட்டு எனும் கலையில் பயிற்சி பெற்று நடித்து வருவதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM