இசைஞானியின் இசை ஆதிக்கம் 'விடுதலை 2 'படத்திலும் தொடருமா..!!?

Published By: Digital Desk 2

18 Nov, 2024 | 05:25 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - சூரி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும்  'தினம் தினமும்' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகின் தனித்துவமான அடையாளத்துடன் வலம் வரும் படைப்பாளி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். 

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.‌

இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அத்துடன் முதல் பாகத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும், பின்னணியிசையும் ரசிகர்களின் பேசு பொருளாக மாற்றம் பெற்றிருந்தது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் இருந்தது. இந்த தருணத்தில் 'விடுதலை 2' படத்தில் இடம்பெற்ற 'தெனந்தெனமும் ஒன் நெனப்பு ... ' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. 

இந்தப் பாடலை பாடலாசிரியர் இசை ஞானி இளையராஜா எழுத , இசையமைப்பாளரும் , பின்னணி பாடுகருமான இசைஞானி இளையராஜா மற்றும் பின்னணி பாடகி அனன்யா பட் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ராஜாவின் வழக்கமான வசீகரிக்கும் மெலோடியுடன் பாடல் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பேராதரவு அளித்து வருகிறார்கள்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right