சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான 3 கிலோவும் 500 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கொழும்பு கோட்டை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் குப்பைத்தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மருதானை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி கூறினார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.