நோயிலிருந்து எம்மை பாதுகாக்கும் மந்திர உச்சாடனம்..!!?

Published By: Digital Desk 2

18 Nov, 2024 | 04:30 PM
image

இன்றைய உலகில் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை தங்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் இணையதளம் மற்றும் இணையம் மூலமாகவே பெற்றுக் கொள்கிறார்கள். பொதுவாக அறிவியல் கண்டுபிடிப்பு எதுவாக இருந்தாலும் அவை இரட்டை விளைவை கொண்டிருக்கும். 

அதாவது சாதகமாகவும் இருக்கும் பாதகமாகவும் இருக்கும் இதில் நவீன அறிவியலின் கண்டுபிடிப்பான இணையத்தை எமக்கு சாதகமாக பாவித்து பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. அதே தருணத்தில் இணையத்தில் உலா வரும் தேவையற்ற விடயங்களை கவனமாக புறம் தள்ளுவதற்கும் அறிவு அவசியம். 

மேலும் இன்றைய சூழலில் எம்மில் பலரும் நோயைப் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை பற்றியும் இணையத்தில் பதிவிட்டு அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்கிறார்கள்.

தலைவலி என்றாலும் அல்லது உடலில் வேறு ஏதேனும் பாதிப்பிற்குரிய அறிகுறி என்றாலும் அந்த அறிகுறிக்கான நோய் என்ன? என்பதை இணையம் மூலம் அறிந்து கொள்கிறார்கள். அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை கேட்கிறார்கள்.‌ 

நோயைப் பற்றி இணையத்தில் உலா வரும் அனைத்து தகவல்களும் மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்துகிறது. இதனால் வைத்தியர்கள் உங்களுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பை அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரிடம் விவரித்து அவரின் ஆலோசனையையும், வழிகாட்டுதலையும், அவர் பரிந்துரைக்கும் சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார்கள்.

ஆனால் மக்கள் வைத்தியர்களின் ஆலோசனையையும், பரிந்துரையையும் புறக்கணித்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளுக்கான சிகிச்சையை தீர்மானித்து, அதனை பெற தொடங்குகிறார்கள். இதனால் அவர்களது ஆரோக்கியம் கெடுகிறது. 

வேறு சிலர் நாட்பட்ட பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றாலும் முழுமையான நிவாரணம் கிடைக்காததால் விரக்தி நிலையை எட்டுகிறார்கள். இந்த நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஆரோக்கியம் கெடாமல் இருக்கவும் ஆரோக்கியம் மேம்படவும் நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பிரத்யேக மந்திரத்தை நாளாந்தம் உச்சரிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள் .

அமிர்த சஞ்சீவினி மந்திரம் என அழைக்கப்படும் இந்த மந்திரத்தை அசுர குரு என புராணங்கள் குறிப்பிடும் சுக்ராச்சாரியார் -இறந்த அசுரர்களை உயிர்ப்பிப்பதற்காக உச்சரித்த மந்திரம் இது என்றும் ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த மந்திரத்தை நாளாந்தம் சூரிய ஹோரையில் உச்சரித்தால் ஆரோக்கியம் மேம்படுவதுடன் நோய் பாதிப்பிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.

வலிமையான மற்றும் எளிமையான அந்த மந்திரம் இதுதான்

''ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா! ''

இந்த மந்திரத்தை நாளாந்தம் பத்து முறை அல்லது 21 முறை சூரிய ஹோரையில் உச்சரிக்க வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை உள்ள சூரிய ஹோரையில் இந்த அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கலாம் என்ற சூட்சமமான குறிப்பையும் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

இந்த மந்திரத்தை நோய் நொடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பவர்கள் மட்டுமல்லாமல் நோய்நொடியால் அவதிப்படுபவர்களும் இதனை உச்சரித்தால் அவர்களுக்கு விரைவில் முழுமையான நிவாரணம் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-02-13 15:34:12
news-image

ஆரோக்கியம் மேம்படுவதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-02-12 17:06:58
news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19