(எம்.எம்.சில்வெஸ்டர்)
(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார் )
இத்தாலிய உணவு வகைகளின் 9 ஆவது உலகளாவிய வாரத்தை முன்னிட்டு கொழும்பில் வில்லா ரோமாவில் அறிமுக நிகழ்வு இத்தாலிய தூதுவர் டெமியானோ பிரான்கோவிக் தலைமையில் கடந்த சனியன்று (16) இரவு நடைபெற்றது.
இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இத்தாலிய உணவு வகைகளின் 9 ஆவது உலகளாவிய வாரத்தை கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட், சினமன் லைப், தாஜ் சமுத்ரா,ஷங்ரி லா ஆகிய பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்படுகின்றன.
இதற்காக இத்தாலியின் பிரபல சமையல் நிபுணர்கள் இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்களின் சிறப்பானதும் தனித்துவமானதுமான இத்தாலிய உணவு வகைகளை தயாரித்து அளிக்கின்றனர்.
அந்த வகையில், சமையல் நிபுணரான டுர்டுரோ (Turturo) சினமன் கிராண்ட் ஹோட்டலிலும், பெல்காஸ்ட்ரோ (Belcastro) சினமன் லைப் ஹோட்டலிலும், காப்புட்டோ (Caputo), டென்டோன் (Dentone) தாஜ் சமுத்ரா ஹோட்டலிலும் இத்தாலிய உணவு வகைகளை தயாரிக்கின்றனர். அத்துடன், இத்தாலிய இல்லத்தில் சமையல் நிபுணர் சினெல் (Cinel) என்பவரால் இக்காலப் பகுதியில் தயாரிக்கப்படுகிறது.
இத்தாலிய உணவு வகைகளின் 9 ஆவது உலகளாவிய வாரத்தில், இலங்கை சமையல் நிபுணர்கள் மற்றும் தொழிற் பயிற்சியாளர்களுக்கும் பெரும் அனுபவமாக அமைவதுடன், சிறப்பு பயிற்சி நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆரோக்கியமான, சீரான மற்றும் நிலையான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இத்தாலிய உணவு வகை திகழ்வதாக இத்தாலிய தூதுவர் டெமியானோ பிரான்கோவிக் அறிமுக நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM