மணிப்பூர் பதற்றம் | முதல்வர் வீடு மீது தாக்குதல்

18 Nov, 2024 | 10:10 AM
image

மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்கள், மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின் மூன்று பேரின் வீடுகளில் சூறையாடினர், சொத்துக்களை தீ வைத்து சேதப்படுத்தினர். இம்பால் நகரின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். போரட்டத்தைத் தடுக்கும் விதமாக ஐந்து மாவட்டங்களில் அரசு காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சில இடங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி, பாதிக்கப்பட்டுள்ள இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபாங்க், கக்சிங், காங்போக்பி மற்றும் சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு இணையம் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் போராட்டம் ஏன்? மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஆறு பேரில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு, ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 3 பேரின் உடல்கள் சனிக்கிழமை பிற்பகல் கண்டெடுக்கப்பட்டன. அழுகிய நிலையில் காணப்பட்ட உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக எஸ்எம்சிஎச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மணிப்பூரில் மீண்டும் போராட்ட பதற்றம் வெடித்தது. இந்நிலையில் அமைச்சர்கள் சபம் ரஞ்சன், எல். சுசிந்த்ரோ சிங் மற்றும் ஒய்.ஹேம்சந்த் ஆகியோரின் வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் கக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

AFSPA ரத்து செய்ய கோரிக்கை: மாநிலத்தில் ஆறு காவல்நிலையத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தினை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறுமாறு மத்திய அரசுக்கு, மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமித் ஷாவின் தேர்தல் பேரணிகள் ரத்து: இதனிடையே, மணிப்பூர் பள்ளத்தாக்கில் மீண்டும் போராட்டமும் பதற்றமும் அதிகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவில் திட்டமிடப்பட்டிருந்த தனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமித் ஷா டெல்லி திரும்பியுள்ளார்.

முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி - குகி குழுவினர் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி கோரிக்கை: மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் பதற்றம் மற்றும் போராட்டம் மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று அங்கு சட்ட ஒழுங்கு மற்றும் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், மிசோரமின் மாணவர் அமைப்பான, மிசோ ஸிர்லை பாவ்ல் (எம்இசட்பி), கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் உள்ள மிசோ மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்"...

2025-02-19 17:14:46
news-image

எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை...

2025-02-19 15:07:39
news-image

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் வரிசையாக நிற்கவைத்து பேருந்து...

2025-02-19 13:22:56
news-image

'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன்...

2025-02-19 10:36:20
news-image

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் -...

2025-02-19 10:27:08
news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி :...

2025-02-19 11:22:57
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01