தேசிய பட்டியல் ஆசனம் திலித்துக்கு சொந்தமானது - சர்வஜன சக்தி

Published By: Vishnu

18 Nov, 2024 | 02:54 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 99(அ) உறுப்புரையின் பிரகாரம் , 2024 பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கமைய சர்வஜன சக்திக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கம்பஹா மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட சர்வஜன சக்தியின் தலைவர் திலித் ஜயவீரவுக்கு வழங்க சர்வஜன சக்தியின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன சக்தி 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட நிலையில் 178,006 வாக்குகளை பெற்றுக் கொண்டது. 1.60 வாக்குகளைப் பெற்ற நிலையில் ஒரு ஆசனங்களை கூட நேரடியாக கைப்பற்றவில்லை. கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளுக்கமைய 1 தேசிய பட்டியல் மாத்திரமே ஒதுக்கப்பட்டது..

சர்வஜன சக்தி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட உதய கம்மன்பில, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட திலும் அமுனுகம ஆகியோர் தோல்விடைந்துள்ளனர்.

சர்வஜன சக்திக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கம்பஹா மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட தொழிலதிபர்  திலித் ஜயவீரவுக்கு வழங்க அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

தொழிலதிபர் திலித் ஜயவீர 2024 ஜனாதிபதித் தேர்தலில் சர்வஜன சக்தி சார்பில் போட்டியிட்டு 122,096 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Update; யாழில் இருந்து பாலை தீவு...

2026-03-06 12:50:23
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-06 12:49:11
news-image

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப்...

2026-03-06 13:00:44
news-image

யாழில் இருந்து பாலை தீவு சென்ற...

2026-03-06 12:42:10
news-image

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க...

2026-03-06 12:37:11
news-image

கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக...

2026-03-06 12:20:49
news-image

மதுரங்குளியில் விபத்து ; மாணவர்கள் இருவர்...

2026-03-06 11:19:19
news-image

கட்டுநாயக்கவில் 11 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர்...

2026-03-06 10:52:42
news-image

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள்...

2026-03-06 10:43:17
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6...

2026-03-06 10:52:21
news-image

மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை ஆரம்பித்தது ஐக்கிய...

2026-03-06 11:13:50
news-image

ரைசினா கலந்துரையாடலில் விஜித ஹேரத் பங்கேற்பு 

2026-03-06 09:07:22