எமது நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைத்து தரப்பையும் அரவணைத்துச்செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சிலகருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களையும் கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்தோம்.இந்த பிரதேசத்தில் வேறுவகையான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதையும் கருத்தில் கொண்டே ஒரு ஒத்த முடிவிற்கு வந்துள்ளோம்.
அத்துடன் 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச்செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதில் அதிக கரிசனையும் விருப்பமும் எங்களுக்கு இருக்கிறது.
எனது தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட அந்த ஆணையை வழங்குமாறு மக்களிடம் கேட்டிருக்கிறேன். எனவே நாங்கள் ஒன்றாக பலமாக இணைந்து செல்லவேண்டிய தேவையை உணர்ந்திருக்கிறோம்.அதற்காக நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம்.
நான் தமிழரசுக்கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட தலைவர். நீதிமன்ற தடையுத்தரவு நீக்கப்பட்டால் நான் தலைவராக செயற்படுவேன். அதற்கான காலம் கனிந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM