சிலாபம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கிராம் நிறை கொண்ட ஹொரோயின் போதைப்பொருள் தொகையொன்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Image result for ஹொரோயின் போதைப்பொருள்

சிலாபம் பகுதியில் பொதி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை, அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த பொதியை மீட்டு சோதனை செய்துள்ளனர்.  

இதன் போது 200 கிலோ கிராம் எடை கொண்ட ஹொரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.