தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இடதுசாரிகளுக்கு என பண்பியல்பு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருப்பார்கள்.
இதனை உணர்ந்து கொண்டு தமிழர்தரப்பு ஒற்றுமைப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் அவற்றினை தமிழர் தரப்பு பறிக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம் அழைப்பாக கூட விடுகின்றோம்.
தேர்தலில் தோற்றுப்போனவன் என இதனை பலர் எள்ளி நகையாடலாம். அவ்வாறில்லாமல் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட தமிழர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பில்லை.
கூட்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறவில்லை. ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்தி வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்களர்களை மலினப்படுத்த விரும்பவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும்.
பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் உடைத்தார்கள். அதனை தொடர்ந்து கட்சி தலைவர்களின் ஈகோ மற்றும் ஆசன பங்கீடும் காரணமாக அமைந்திருந்தது என மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM