(க.கம­ல­நாதன்)

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை முன்­ன­ி­லைப்­ப­டுத்தி வெளி­யாகும் கறுப்­புக்­கொடி செய்­திகள் உண்­மைக்கு புறம்­பா­­ன­வை­யாகும். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பிர­தம அதி­தி­யாக கலந்து ­கொள்ளும் வெசாக் தின நிகழ்­வு­களில் நானும் கலந்­து­கொள்வேன்.  எனக்கு எந்த தடையும் கிடை­யாது என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

ருவன்­வெல்ல, கோன­கல்­தெ­னிய, அரி­ய­சிந்­தா­சி­ரம விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வெசாக் தின நிகழ்­வு­களை உயர்ந்த அளவில் நடத்த வேண்டும் என்­பதே எமது ஆவ­லாகும். ஆனாலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச வெசாக் தின நிகழ்­வு­களின் போது கறுப்புக் கொடி ஏந்த வேண்டும் என்று கூறினார் என்று வெளி­யாகும் செய்­திகள் உண்­மைக்கு புறம்­பா­னவை.

அந்த விட­யத்தில் உண்­மை­யில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவின் கருத்­துக்­களை திரிபுபடுத்தி உண்­மைக்கு புறம்­பான செய்­தி­களை வெளி­யி­டு­வ­தனை தவிர்க்க வேண்டும். இதன் பின்­ன­ணியில் உள்ள உண்­மை­யான பிரச்­சி­னையை சக­லரும் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யையும் அவரின் வரு­கையையும் மேற்­படி விவ­கா­ரத்­துடன் சம்பந்தப்படுத்தப் பார்ப்­ப­தா­னது ஏற்­பு­டை­ய­தல்ல. எவ்வாறாயினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்வுகளில் நானும் கலந்துகொள்வேன் அதற்கு எனக்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.