(நெவில் அன்தனி)
கத்தார் தேசத்தின் தோஹா, அல் கோஹ்ர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (16) இரவு நடைபெற்ற யேமனுக்கு எதிரான சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது.
போட்டி முடிவடைய ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது ஜெக் டேவிட் ஹிங்கேர்ட் போட்ட கோல் இலங்கையை வெற்றி அடையச் செய்தது.
யேமென் ஆதிக்கம் செலுத்திய போட்டியில் ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே இலங்கை அணியினர் கோல் போடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் இலங்கையின் பின்கள வீரர்களின் சாமர்த்தியமும் அணித் தலைவர் - கோல்காப்பாளர் சுஜான் பெரேராவின் சிறந்த கோல்காப்பும் எதிரணியின் கோல் போடும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தின.
போட்டியின் 89ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு கிடைத்த த்ரோ இன் பந்தை மொஹமத் ரிவ்கான், எதிரணியின் கோல் எல்லையை நோக்கி எறிந்தார்.
அப்பந்தை தனது தலையால் பரத் சுரேஷ் பின்னோக்கி முட்டிவிட்டார். அதனை நோக்கி தாவிய ஜெக் டேவிட் ஹிங்கேர்ட் தனது தலையால் பின்னோக்கி முட்ட பந்து கோலினுள் புகுந்தது. அதுவே இலங்கையின் வெற்றி கோலாக அமைந்தது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் போட்டி எதிர்வரும் செய்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM