கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியம்பலாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது ஆணொருவரும் 38 வயது பெண்ணொருவருமே கைதாகியுள்ளனர்.
கைதான பெண் சிங்கப்பூர், ஹொங்கொங், துபாய் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, சியம்பலாகொடயில் உள்ள வீட்டில் கைதான ஆணுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் இரண்டரை வருடங்களாக பலரிடம் கடவுச்சீட்டுக்களை வாங்கி வந்திருக்கிறார்.
இந்த கடவுச்சீட்டுக்களை ராஜகிரிய பிரதேச வீதிகளில் காத்திருந்தும், வாகனங்களில் அமர்ந்தவாறும் பலரிடம் பெற்றிருக்கிறார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பிப்பதாகவும், வேலைக்கான நேர்காணலில் பங்கேற்கச் செய்து வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகவும் கூறி, பல நபர்களிடம் 2 - 3 லட்சம் ரூபாய் வாங்கியிருப்பதும் விசாரணைகளின் ஊடாக அறிய முடிகிறது.
மேலும், கைதான சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM