(எம்.எப்.எம்.பஸீர்)

பிலி­யந்­தலை பகு­தியில் போதைப் பொருள் சுற்றி வளைப்­பொன்­றுக்கு சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான குழு­வினர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் மூன்று நாட்­க­ளுக்குள் தனக்கு அறிக்கை சமர்­ப்பிக்­கு­மாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தரவுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

 விஷே­ட­மாக எவ்­வித முன்­னேற்­பா­டு­களும் இன்றி இது போன்ற சுற்­றி­வ­ளைப்­புக்கு செல்­வ­தற்­கான தேவை உட்­பட சம்­பவம் தொடர்­பான முழு­மை­யான விசா­ரணை அறிக்கை ஒன்றை மூன்று நாட்­க­ளுக்குள் தனக்கு வழங்­கு­மாறு அமைச்சர் பொலிஸ் மா அதி­ப­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  இது தொடர்பில் விசா­ரணை செய்து அறிக்கை தயா­ரிக்கும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர­வினால் பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­ப­தியும் சர்­வ­தேச உற­வுகள் மற்றும் பயிற்சி தொடர்­பி­லான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீ­பிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

பிலி­யந்­த­லையில் வங்கி ஒன்­றுக்கு அரு­கா­மையில் நேற்று முன் தினம் இரவு இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்­டபிள் உயி­ரி­ழந்­த­துடன், மேலும் ஐந்து பேர் காய­ம­டைந்­தி­ருந்­தனர். 

இதன் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான அபே­விக்­ரம என்­பவர் உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் நேற்று அவர் பொலிஸ் சார்ஜன் தரத்­துக்கு தர­மு­யர்த்­தப்­பட்­ட­தாக பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­தது. அத்­துடன் அவ­ரது இறுதிக் கிரி­யை­களும் மார­வில பொது மயா­னத்தில் பூரண பொலிஸ் மரி­யா­தை­யுடன் நடத்­தப்­படும் என பொலிஸ் தலை­மை­யகம் பொலிஸ் மா அதி­பரை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேற்று

வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட் டார்.