பத்­த­ர­முல்ல, சோகம் வளா­கத்தில் உலகின் மிக நீள­மான மணலால் செய்­யப்­பட்ட சாய்­நி­லை­யி­லுள்ள புத்தபெரு­மானின் சிலை இன்று திரை­நீக்கம் செய்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இவ்­ உ­ரு­வச்­சி­லை­யா­னது சுதர்சன் பட்­நாயக் என்­ப­வரால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இவர் 2014ஆம் ஆண்டு இந்­திய அர­சாங்­கத்­தினால் பத்­மஸ்ரீ விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­ட­வ­ராவார்.

உல­கத்தில் புத்தபெரு­மானின் சாய்­நிலை சிற்­பமே மிகவும் பிர­சித்­த­மாக விளங்­கு­கின்­றது. காந்­தா­ராவின் கிரேக்க கால சிற்­பங்­களை ஒத்­த­தாக அமைக்­கப்­பட்­டுள்ள இச்­சிற்பம் போன்று ஏற்­க­னவே தம்­புள்ளை குகைக்கோயில் மற்றும் பொலன்னறுவையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.