2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் வாசிப்பு பழக்கம் மற்றும் பேச்சுத் திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே’ என்ற இவ்வருடத்துக்கான தொனிப்பொருளுக்கு அமைவாக அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் நூலக கற்றல் வள நிலையம் மாணவர்களுக்கு பேச்சு போட்டி ஒன்றை ஒழுங்கமைத்துள்ளது.
மாணவர்களின் ஆளுமை விருத்தியில் நூல்களின் முக்கியத்துவம்
பயனுள்ள மற்றும் செயற்றிறன் மிக்க இணையவழிக் கற்றல்
மாணவர்களின் தகவல் தேவைகளும் தற்காலத்தில் அதற்கான வாய்ப்புகளும்
சூழல் பாதுகாப்பும் மரங்களின் முக்கியத்துவமும்
ஏதாவது ஒரு தலைப்பில் 4–5 நிமிடங்களுக்கு குறையாமல் பேச்சு அமைதல் வேண்டும். போட்டியாளரின் சொந்த உருவாக்கமாக அமைதல் அவசியம். இது தேசிய மட்ட போட்டியாகவும் திறந்த போட்டியாகவும் அமையும். போட்டியாளர் இலங்கை அரச பாடசாலை ஒன்றில் நடப்பு வருடத்தில் கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.
போட்டியாளரின் முழுப்பெயர், பாடசாலை, தரம் என்பவற்றை முதலிலேயே கூறி விட்டு பேச்சை நிகழ்த்த வேண்டும். (இவ்விபரங்களை பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் தனியே அனுப்பி வைத்தல் அவசியம்) பேச்சை ஒளிப்பதிவு செய்து இறுவட்டில் முறையாக பதிப்பித்து முறையாக பொதியிட்டு கிடைக்கச்செய்தல் அவசியம். முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பெறுமதி பரிசில்களும் 15 வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும். தேடல் ஆய்வுப்பார்வையின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
முடிவுத்திகதி 20/11/2024 ஆகும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானதாக அமையும். அனுப்ப வேண்டிய முகவரி நூலகப் பொறுப்பாசிரியர் ஹைலண்ட்ஸ் கல்லூரி அட்டன். மேலதிக தகவல்களுக்கு 0718396769, 0778914366 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM