தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் பிரத்யேக அறிமுக காணொளி வெளியீடு

Published By: Digital Desk 5

16 Nov, 2024 | 05:39 PM
image

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான தனுஷ் - நாகார்ஜுனா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'குபேரா' எனும் திரைப்படத்திலிருந்து பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' எனும் திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப்,  தலீப் தஹில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். 

வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமீகோ கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் தனுஷ்- நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தானா - ஆகியோர் திரையில் தோன்றி ரசிகர்களை கவர்கிறார்கள். 

அத்துடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்திருக்கிறார்கள். 

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நேரடியாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right