(எம்.எப்.எம்.பஸீர்)

சர்­வ­தேச வெசாக் தின நிகழ்­வு­களில் பங்­கேற்க இன்று இலங்கை வரும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு தேவை­யான அனைத்து பாது­காப்பு ஏற்­பா­டு ­களும் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

அதன்­படி இன்று மாலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டையும் இந்தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் நேரடி பாது­காப்­பா­னது, இந்­தி­யாவில் இந்­திய பிர­த­ம­ருக்கு பாது­காப்­ப­ளிக்கும் எஸ்.பி.ஜி. எனப்­படும்  சிறப்பு பாது­காப்பு குழு ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இது தொடர்பில் தேவை­யான எஸ்.பி.ஜி. சிறப்பு பாது­காப்புப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தலை­மையில் குழு­வொன்று ஏற்­க­னவே இலங்கை வந்து கொழும்பு மற்றும் அட்டன் பகு­தி­களின் பாது­காப்பு நில­வ­ரங்­களை ஆராய்ந்­துள்­ள­துடன் இன்று பிர­தமர் மோடி­யுடன் இலங்கை வரும் அவ­ரது மெய் பாது­கா­வ­லர்கள் பாது­காப்பு நட­வ­டிக்­கையில் இணைந்து கொள்­ள­வுள்­ளனர். 

இந்த நேரடி பாது­காப்­புக்கு மேல­தி­க­மாக கொழும்பு மற்றும் அட்டன் பகு­தி­களில் மோடி பங்­கேற்கும் நிகழ்­வுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெய­சுந்­தரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இரு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களின் கீழ் சிறப்பு பாது­கா­பபு ஏற்­பா­டுகள் செய்­யப்பட்­டுள்­ளன.

விஷேட நிலை­மைகள் மற்றும் பிர­புக்­களின் பாது­காப்பு தொடர்­பி­லான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்­ர­ம­சிங்க, பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­பதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் ஆகி­யோரின் மேற்­பார்வை, ஆலோ­ச­னைக்கு அமை­வாக சுமார் 6000 பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் இந்த பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்கின்றன.

இந்­நி­லையில் 24 மணி நேரத்­துக்கும் குறை­வான காலப்­ப­கு­தியே இலங்­கையில் நரேந்­திர மோடி தங்­கி­யி­ருக்க போகும் நிலையில், இன்று மாலை முதல் கொழும்பு, அட்டன் பகு­தி­களில் மூன்று அடுக்கு சிறப்பு பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன.

இந்த பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உதவும் முக­மா­கவும், இந்­திய பிர­தமர் கொழும்­புக்கு வெளியே பய­ணிக்கும் போது அதற்காக பயன்­ப­டுத்­தவும் என இந்­திய பிர­த­மரின் பாது­காப்பு பிரி­வுக்கு சொந்­த­மான எம்.ஐ. 17ரக ஹெலி­கொப்­டர்கள் நான்கு இலங்­கையில் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக இன்று மாலை 6.15 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்­கவில் இருந்து கொழும்பு நோக்கி பய­ணிக்கும் பிர­தமர் நரேந்­திர மோடி,  தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் தங்­கி­யி­ருக்கும் நிலையில் கொழும்பு நகரின் பாது­காப்பா­னது கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­னா­யக்­கவின் நேரடி கட்­டுப்­பாட்­டுக்குள் வைக்­கப்பட்­டுள்­ளது. 

இந் நிலையில் நாளை 10. 50 மணி­ய­ளவில் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் காலாற்­படை தலை­மை­யக மைதா­னத்தில் இருந்து அட்­டனில் இடம்­பெறும் நிகழ்­வு­க­ளுக்­காக நரேந்­திர மோடி ஹெலி­கப்டர் ஊடாக செல்­ல­வுள்ள நிலையில் அவர் அங்கு சென்று மீள கட்­டு­நா­யக்க விமான நிலையம் ஊடாக இந்­தியா செல்லும் வரை கொழும்பு மற்றும்  மோடி பய­ணிக்கும் பகு­தி­களின் பாது­காப்­பா­னது விஷேட பாது­காப்புப் படை­யி­னரின் பூரண கட்­டுப்­பாட்­டுக்குள் இருக்கும் என பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

இத­னை­விட அட்டன் செல்லும் நரேந்­திர மோடி, டிக்­கோயா -கிளங்கன் வைத்­தி­ய­சாலை திறப்பு விழா நிகழ்விலும், நோவோர்ட்டில் மலை­யக மக்­களை சந்­திக்கும் திறந்த நிகழ்வு ஆகி­யவை இடம்­பெறும் நிலையில் அட்டன் முழு­து­மான பாது­காப்பு அட்டன் பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சர் பி.யு.உடு­கம்­சூ­ரி­யவின் நேரடி கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்பட்­டுள்­ளது. அதன்­படி விஷே­ட­மாக அட்டன் டிக்­கோயா மற்றும் நோவூட் பகு­தி­களில் மூன்­ற­டுக்கு பாது­காப்பு போடப்பட்­டுள்­ள­துடன் தற்­போதும் பிர­தே­சத்தின் பாது­காப்பு உறுதி செய்­யப்பட்­டுள்­ளது.

அட்டன் பிர­தேச பாது­காப்பு தொடர்பில் நேற்று முன் தினம் அங்கு சென்ற எஸ்.பி.ஜி. அதி­கா­ரிகள் உள்­ளிட்ட சிறப்பு பாது­காப்பு அதி­கா­ரிகள் அப்­ப­கு­தியின் பாது­காப்பு நில­வ­ரத்­தினை கண்­கா­ணித்­தனர். அத்­துடன் மோடி பய­ணிக்கும் ஹெலி­கொப்­டரை தரை இறக்கும் போது எவ்­வா­றான அணு­கு­மு­றை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பது தொடர்பில் ஒத்­திகை நட­வ­டிக்­கை­யிலும் அவர்கள் ஈடு­பட்­டனர். 

இதன் போது எம்.ஐ.17 ரக ஹெலிகொப்­டர்கள் தறை­யி­றக்­கப்­படும் போது அப்­ப­கு­தியில் இருந்த சில வீடு­களின் கூரைத் தக­டுகள் கழன்று வீசுண்­டுள்­ள­தாக அட்டன் பொலிஸ் நிலை­யத்­துக்கு ஐவர் முறைப்­பாடு செய்­துள்­ளனர். 

இத­னை­ய­டுத்து அது தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்­தப்பட்­டுள்ள நிலையில் ஹெலி­கப்டர் இறக்­கப்­படும் பகு­தி­களை அண்­மித்­துள்ள வீடு­களின் கூரை­களில் மணல் மூடை­களை வைக்க இந்­திய பாது­காப்பு அதி­கா­ரிகள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

இதனை விட ஹெலி­கொப்டர் இறக்­கப்­பட்­டது முதல் நிகழ்­வுகள் இடம்­பெறும் பகு­தி­க­ளுக்கு பிர­தமர் நரேந்­திர மோடி செல்லும் போதும், நிகழ்­வு­களில் அவர் பங்­கேற்கும் போதும் குளவி தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­காமல் இருப்­பதை உறுதி செய்ய பிர­தே­சத்தில் உள்ள குளவிக் கூடுகள் அகற்­றப்­பட்­டுள்­ளன. 

இது தொடர்­பி­லான பணி­யினை அட்டன் பொலிஸார் தனியார் நிறு­வனம் ஒன்­றிடம் கைய­ளித்­தி­ருந்த நிலையில் நேற்று முன் தினம் அப்பணி நிறைவு செய்யப்பட்டு அது தொடர்பிலான பாதுகாப்பு தன்மையும் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6.15 மணி முதல் நாளை மாலை 4.55 வரையிலான காலப்பகுதியில் மோடியின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை பாதுகாப்புத் தரப்பு அதி உச்ச பட்ச நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை மோடி பயணிக்கும் போது அவ்வீதியின் எந்தப்பகுதியாலும் எவ்விதமான வானங்களும் அனுமதியளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.