சமுத்திரக்கனி நடிக்கும் 'ராஜா கிளி' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

16 Nov, 2024 | 05:07 PM
image

இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்' ராஜா கிளி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரான உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராஜா கிளி' எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, எம். எஸ். பாஸ்கர், இளவரசு, 'ஆடுகளம்' நரேன், பழ. கருப்பையா, ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கேதார்நாத் மற்றும் எஸ். கோபிநாத் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தம்பி ராமையா மற்றும் சாய் தினேஷ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் கடந்த ஆண்டு வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. 

வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்த இந்த திரைப்படம் தற்போது எதிர்வரும் 29 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right