சரத்குமார் , ரகுமான், அதர்வா , ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்தில் நடிகர் அதர்வா திரைப்படத்துறையில் பணியாற்றும் உதவி இயக்குநராக நடித்திருக்கிறார் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பிரத்யேக காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்தில் சரத்குமார், ரகுமான், அதர்வா, நிக்கி கல்ராணி, அம்மு அபிராமி, பிரவீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கருணா மூர்த்தி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதன் போது நடிகர்கள் அதர்வா, ரகுமான் நடிகை அம்மு அபிராமி, இயக்குநர் கார்த்திக் நரேன், கிரியேட்டிவ் புரொடியூசர் மனோஜ் பீனா ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் நடிகர் அதர்வா பேசுகையில், '' இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய 'துருவங்கள் 16' படத்தை பார்த்த பிறகு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பினேன்.
அதன் பிறகு அவர் எம்மை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். இப்படத்தின் கதை எமக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை என்றாலும், இயக்குநர் மீதான நம்பிக்கையின் காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்படத்தை பார்த்த பிறகு அவரின் திறமையை கண்டு வியந்தேன்.
ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும். இயல்பான கதையை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். இது ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.
அனைவரும் பட மாளிகைக்கு வருகை தந்து பார்த்து ரசித்து, ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM