குருதி புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை

16 Nov, 2024 | 04:34 PM
image

உலக அளவில் புதிதாக உருவாகும் புற்று நோயாளிகளில் மூன்று சதவீதத்தினர் லுக்கேமியா எனப்படும் குருதி புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இத்தகைய புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது CAR T- செல் தெரபி எனும் நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

புற்று நோய் பாதிப்பு என்றால் தற்போது வரை வைத்தியர்கள் சத்திர சிகிச்சை- கீமோதெரபி- கதிர்வீச்சு சிகிச்சை - ஆகிய சிகிச்சைகளை பிரத்யேகமாகவும், ஒருங்கிணைந்தும் வழங்கி நிவாரணம் அளித்து வருகிறார்கள்.

இத்தகைய சிகிச்சை முறையில் எம்முடைய உடல் உள்ள புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி அதனூடாக செல்களை அழித்து நிவாரணம் வழங்கினார்கள்.

அந்த வகையில் தற்போது மெலனோமா, நுரையீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, லிம்போமா உள்ளிட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தகைய சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவ விஞ்ஞானிகள் நோயெதிர்ப்பு சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினார்கள். இதற்கு CAR T செல் தெரபி என பெயரிட்டிருக்கிறார்கள். இத்தகைய நவீன சிகிச்சை - லுக்கேமியா மற்றும் லிம்போமா புற்று நோய்களை உண்டாக்கும் செல்களை அழிப்பதற்கும் அவை பரவாமல் தடுப்பதற்கும் உதவுகிறது.

இந்த சிகிச்சையை மேற்கொண்டால் எம்முடைய உடலில் புற்றுநோய் செல்களை நேரடியாக அழிக்கிறது. இந்த சிகிச்சையின் போது நோயாளிடமிருந்து வெள்ளை அணுக்கள் எனப்படும் T செல்களை சேகரித்து, அதனை ஆய்வகத்தில் சுத்திகரித்து, மறு வடிவமைப்பு செய்து நோயாளியின் உடலில் செலுத்துகிறார்கள். இவை சிமெரிக் ஆன்ட்டிஜன் ஏற்பிகள் என அழைக்கப்படுகின்றன.

இவை உடலுக்குள் சென்று புற்றுநோயின் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள புரதங்கள் அல்லது ஆட்டிஜன்களை கண்டறிகின்றன. அத்துடன் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து, அவை பரவாமலும் தடுக்கின்றன.

மேலும் நோயாளியின் உடலில் செலுத்தப்படும் செயற்கை மூலக்கூறுகள் கொண்ட CAR T- செல்கள் பல்கி பெருகி, புற்றுநோய் செல்களை இனம் கண்டறிந்து அழிக்கிறது. இந்த நவீன சிகிச்சையால் புற்று நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறு உருவாகிறது.

வைத்தியர் நித்தின்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45
news-image

கை விரல் நுனியில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-01-01 21:40:07
news-image

யூர்டிகேரியா எனும் தோல் அரிப்பு பாதிப்பிற்கு...

2024-12-31 17:09:55