இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை வடக்கில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தனக்கு வழங்குமாறு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் நடராஜா தமிழ் அரசுக் கட்சியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எம்.பி. நடராஜ் ஆகிய நான் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் அங்கத்துவம் பெற்ற உறுப்பினர். 1995ஆம் ஆண்டு தொடக்கம் இக்கட்சியுடன் இணைந்து பயணித்துள்ளேன். 2005இல் இக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் செயலாளராகவும் கடமையாற்றினேன்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் எமது கட்சியில் போட்டியிட்டு 10,800 வாக்குகளைப் பெற்றதுடன் சுழற்சிமுறையில் வட மாகாண சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றினேன்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் சார்பாக மீன் சின்னத்தில் போட்டியிட்டு கிடைத்த 2 ஆசனங்களின் ஒத்துழைப்பின் மூலம் எமது கட்சி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஆட்சி அமைத்ததனை தாங்கள் அறிவீர்கள்.
வடக்கில் வாழ்கின்ற சுமார் 2,00,000 மலையக மக்கள் சார்பாக இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தேவை என்பதனை தாங்கள் அடிக்கடி வலியுறுத்தியும் வந்துள்ளீர்கள். அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் சார்பாக எனக்கு தந்துதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எமது கட்சியினால் தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேசியப் பட்டியல் முன்மொழிவில் எனது பெயரும் தங்களால் பரிந்துரைக்கப்பட்டது என்பதையும் நினைவுகூருகின்றேன் என்றுள்ளது.
இதேவேளை இக்கடித்தின் பிரதிகள் கட்சியின் தலைவர் எஸ். சேனாதிராஜா, சி. சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM