பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் குறைவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில் சாதனை பதிவாக, 1,600 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
காற்றின் தரம் மோசமடைந்து உள்ள சூழலில், பாடசாலை உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 17 ஆம் திகதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புகைமூட்டம் மற்றும் குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழல் போன்றவற்றால்,
அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24 ஆம் திகதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு, தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் இணைய வழியே கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், முர்ரீ மாவட்டத்திற்கு இதற்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, புகைமூட்டம் பரவி நிலைமை மோசமடைந்த நிலையில், லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரை முழு ஊரடங்கு வெள்ளிக்கிழமை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, இன்றும் நாளையும் இந்த முழு ஊரடங்கு தொடருவதோடு, திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM