குவைட் நாட்டுக்கு பணிப்பெண்களாக சென்றிருந்த பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளான இலங்கைப் பெண்களில் 80 பேர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று நாடு திரும்பியுள்ளனர்.

பணிப்பெணிகளிடம் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.