அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு கரோலின் லீவிட் என்ற இளம் பெண்ணை ஊடக செயலாளராக நியமித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் பிரச்சார நடவடிக்கைகளின் ஊடக பேச்சாளராக கரோலின் லீவிட் செயற்பட்டுள்ளார். அத்தோடு, முன்பு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உதவி ஊடக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், 27 வயதான கரோலின் லீவிட் அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகைக்கு நியமிக்கப்பட்ட முதல் இளம் ஊடக செயலாளராவார்.
"கரோலின் புத்திசாலி, திடமானவர், மிகவும் திறமையான செய்தி தொடர்பாளர் என்பதை நிரூபித்துள்ளார்" என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷையர் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட லீவிட், தனது சொந்த மாநிலத்தில் உள்ள கத்தோலிக்கக் கல்லூரியான செயிண்ட் அன்செல்ம் கல்லூரியில் தகவல் தொடர்பு மற்றும் அரச அறிவியலைப் படித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM