(எம்.மனோசித்ரா)
கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் ஹெரோயின் கடத்தலுக்கு பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் வெள்ளிக்கிழமை (15) காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட படகு மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதே அதிலிருந்து 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ 840 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 - 34 வயதுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு இதுவரைக் காலமும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 17 483 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM