பெண் பிள்ளைகளாக இருந்தாலும்... ஆண் பிள்ளைகளாக இருந்தாலும்.. பருவ வயதை எட்டிய பிறகு அவர்களுடைய பெற்றோர்களுக்கு உள்ள ஒரே கவலை தங்களுடைய பிள்ளைகளின் திருமணம் தான். இன்றைய சூழலில் ஏராளமான பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இருப்பினும் இன்றும் பெற்றோர்கள் பார்த்த வரனை திருமணம் செ ய்து கொள்ளும் ஆண்களும் இருக்கிறார்கள் பெண்களும்
இருக்கிறார்கள். அத்துடன் தமிழ்கலாச்சாரத்தை காலம் காலமா க போற்றி ப் பாதுகாக்கும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்களை மேற்கொள்வதற்கு முயற்சிக்கும் போது தடை ஏற்படக்கூடும்.
விரும்பிய வரன்கிடை க்காமல் இருப்பது... உரி ய தருணத்தில் முறையானவரன் கிடைக்காமல் இருப்பது... மாங்கல்ய பிராப்தம் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கிடைப்பது... திருமணத்திற்கு பொருளாதார ரீதியாக தயார் இல்லாமல் இருப்பது... என பல்வே று சூட்சமமான தடைகள் இருக்கிறது.
திருமண வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் அவர்களது ஒரே இலக்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது மட்டுமாகவே இருக்கும். இதற்காக அந்த வயதில் ஆணும், பெண்ணும் எந்தவி த சமரசத்திற்கும் தயாராகவே இருப்பா ர்கள்.
ஆனாலும் இவர்களது வாழ்வில் இல்லற வசந்தம் என்பது வீசாமல் ஏதேனும் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இவர்களுக்காக... இவர்களின் திருமண தடையை அகற்றுவதற்காக... எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய முறையி லான உபாயம் ஒன்றினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: புதிய பூட்டு & சாவி திருமண தடையை எதிர்கொண்டிருக்கும் மணமகனும், மணமகளும் அருகில் இருக்கும் சந்தைக்கு சென்று அல்லது விற்பனை நிலையத்திற்கு சென்று உங்களுடை ய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் பெரிதும் அல்லாத சிறிதும் இல்லாத மத்திமமான பூட்டு ஒன்றிணையும், அதற்குரிய சாவியினையும் வாங்கவேண்டும். அதனை நேராக வீட்டிற்கு எடுத்து வந்து உங்களது பூஜை அறையில் வைத்து விடவும்.
செவ்வாய்க்கிழமைகளில் காலையில் செவ்வாய் ஹோரை என குறிப்பிடப்படும் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் உங்களது பூஜை அறையில் இருக்கும் முருகப்பெ ருமானி ன் உருவப்படத்திற்கு செவ்வரளி மாலையை சாற்றி வழி படுங்கள். அதன் பி றகு நீங்கள் பூஜை அறையில் வைத்திருக்கும் பூட்டு+ சாவியின் உறையை திறந்து, சாவியை பூட்டிற்குள் பொருத்தி திறந்து மூடவும்.
மீ ண்டும் திறந்து மூடவும்... மீ ண்டும் திறந்து மூடவும்... இதுபோ ல் 108 முறை தொ டர்ச்சியாக சாவி யை பூட்டிற்குள் பொருத்தி திறந்து மூடவும். இந்த தருணத்தில் (ஓம் சரவணபவ... அல்லது.) உங்களின் மனதைக் கவர்ந்த முருகனின் மந்தி ரத்தை மனதில் தியானம் செ ய்யுங்கள். அத்துடன் 'எந்தவி த தடை யும் இல்லாமல் வி ரும்பிய வரன் அமைந்து, திருமணம் சுபமாக மகிழ்ச்சியாக நிறைவடை ந்து, இல்லற வாழ்வி ல் இனிதா க அடியெடுத்து வைக்க வேண்டும்' என
பிரார்த்தனை செய்து கொள்ள வே ண்டும். இந்த பிரார்த்தனயை தொடர்ச்சியாக 48 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். நிறைவடை ந்த உடன் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானுக்கு செவ்வரளி மாலையை சாற்றி , அர்ச்சனை செய்து வழி பட வேண்டும். இந்த பிரார்த்தனை நிறைவடையும் தருணத்தில் உங்களுக்கான திருமண வரன் கிடை க்கப்பெற்று மாங்கல்ய யோகம் முருகனின் அருளால் கிடை ப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM