மாத்தளை, லக்கல எலவாகந்த பிரதேசத்தில் 14ஆம் திகதி வியாழக்கிழமை மாலை பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - மஹியங்கனை வீதியின் எலவாகந்த பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்தானது.
குறித்த விபத்து இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அப்போது பஸ் மண்மேடு ஒன்றின் மீது மோதி கவிழ்ந்தது.
பஸ்ஸில் பயணித்த 37 பேரும் வேனில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்து வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் பஸ்ஸில் இருந்த இருவர் மற்றும் வேனில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சுற்றுலா சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM