தேசிய கட்சியொன்றின் சின்னம் மற்றும் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரின் இலக்கம் ஆகியவை அச்சிடப்பட்ட சிறிய அளவிலான காகிதங்கள் பலவற்றை வாக்களிப்பு நிலையமொன்றின் வாயிலில் நபர் ஒருவர் வீசிச்சென்ற சம்பவமொன்று நோர்வூட் பகுதியில் பதிவாகியுள்ளது.
பொகவந்தலாவை தர்மகீர்த்தி சிங்கள மகா வித்தியாலயம் இப்பிரதேசத்தின் ஒரு வாக்களிப்பு நிலையமாக விளங்கியது.
காலை 10 மணியளவில் அவ்வாக்களிப்பு நிலையத்துக்கு வருகை தந்த ஒருவர் இவற்றை வாயிற்கதவுகளுக்கு அருகில் வீசிச்சென்றுள்ளார்.
வாக்களித்து விட்டு செல்லும் போது இவர் இவற்றை ஏனையோர் கண்களில் படுவதற்காக எறிந்து விட்டு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
எனினும் இது குறித்து அவ்வழியே வருகை தந்த வாக்காளர்கள் பொலிஸாருக்கு அறிவிக்கவும் அவர்கள் அவ்விடத்தில் வந்து அவற்றை உடனடியாக அற்புறப்படுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM