(எம்.மனோசித்ரா)
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன். சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வியாழக்கிழமை (14) தேர்தலில் வாக்களித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம். மாறாக மக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.
சர்வஜன பலய கட்சியின் பொலன்னறுவை மாவட்ட வேட்பாளர் தஹம் சிறிசேன தெரிவிக்கையில், குறுகிய காலத்துக்குள் எமது கட்சி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாது போயுள்ளது. எனவே எதிர்க்கட்சிக்கான பொறுப்புக்களை எம்மால் சிறந்த முறையில் நிறைவேற்ற முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM