வாக்குச்சீட்டை கிழித்த நபர் கைது ; காலியில் சம்பவம்!

14 Nov, 2024 | 04:36 PM
image

காலி, அக்மீமன பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் வாக்குச்சீட்டை கிழித்ததாக கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவர் ஆவார். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அக்மீமன பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றிற்கு இன்று புதன்கிழமை (14) சென்றுள்ளார்.

இதன்போது, வாக்கெடுப்பு நிலையத்தில் இருந்த அதிகாரிகள் சந்தேக நபரிடம் கையடக்கத் தொலைபேசியை உள்ளே எடுத்துச்  செல்ல முடியாது என கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சந்தேக நபர் தனது வாக்குச்சீட்டை கிழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் -...

2025-02-13 08:49:04
news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25