இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் (மலையக மக்கள்) எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான தீர்வு என்னவென்பது குறித்தும் இந்தியப் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று பகல் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.