ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் லிமினி ராஜபக்ஷ ஆகியோர் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்தனர்.
மெதமுல டி.ஏ. ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (14) காலை தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதன் பின்னர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது,
"ஒரு கட்சி என்ற வகையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தலை நாங்கள் வலுவான மற்றும் சிறந்த நிலைப்பாட்டுடன் எதிர்கொள்கிறோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால தேர்தல்களின் வெற்றியின் தொடக்கமாக இந்தத் தேர்தலை நாங்கள் கருதுகிறோம்.
இந்த பொதுத் தேர்தலை ஒரு புதிய தொடக்கம் என்று கூறலாம். நாட்டை நேசிக்கும், நாட்டின் ஒற்றுமையை நேசிக்கும், கலாச்சாரத்தை நேசிக்கும் ஒரு அரசியல் தலைமுறை நம் நாட்டில் மீண்டும் உருவாக்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM