மன்னார் மாவட்டத்தில் இன்றைய தேர்தல் வாக்குப் பதிவுகளின் போது 6 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரத்தைப் பொறுத்த வரையில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவரப் படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21,784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.
அதேநேரம் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் இன்றைய தினம் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM