மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

Published By: Digital Desk 3

14 Nov, 2024 | 11:34 AM
image

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை (14) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

நுவரெலியா மாவட்டத்தில்  6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

கொத்மலை தேர்தல் தொகுதியில் 88,219  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 65 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 10,000 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 2,500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பட்டியல் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது...

2024-12-09 01:56:30
news-image

புகையிரத்திலிருந்து தவறி விழுந்த சீன பெண்!

2024-12-08 22:35:00
news-image

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன்...

2024-12-08 21:41:49
news-image

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக்...

2024-12-08 19:51:50
news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்களில் சோதனை

2024-12-08 21:02:47
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01