பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவை சந்தித்தார் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பசுபிக் பிராந்திய அபிவிருத்தியின் சிரேஷ்ட நிர்வாக ஆலோசகர்

14 Nov, 2024 | 11:14 AM
image

வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) இந்து - பசுபிக் பிராந்திய அபிவிருத்தியின் சிரேஷ்ட நிர்வாக ஆலோசகர் கலாநிதி பென் போவிஸ் (Ben Powis) மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் டொம் சோப்பர் (Tom Soper) ஆகியோர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவை சந்தித்தனர். 

இந்த சந்திப்பு கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் கலந்துகொண்டார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜனநாயகத்திற்கான வெஸ்மினிஸ்டர் மன்றம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் நெருக்கமாக ஆற்றிவரும் பங்களிப்பை பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன பாராட்டினார். 

இவ்வாறு வழங்கப்பட்ட உதவிகள் பாராளுமன்றத்தை ஒரு நிறுவனமாக மேலும் வலுப்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

எதிர்காலத்திலும் இதே ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

9வது பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் சிறப்புக்கள் மற்றும் 10வது பாராளுமன்றத்தின் நிலைமாறும் சூழல் குறித்த விடயங்களை கலாநிதி பென் போவிஸ் கேட்டறிந்துகொண்டார். 

பதில் செயலாளர் நாயகம் மற்றும் உதவி செயலாளர் நாயகம் ஆகியோர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிடத்தக்க சட்டங்கள் பற்றி சுருக்கமாக விளக்கமளித்ததுடன், பாராளுமன்றத்தின் குழு முறைமைகள் பற்றி விரிவான விளக்கத்தை வழங்கினர். 

துறைசார் மேற்பார்வைக் குழு பொறிமுறையில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அவர்கள் மேலும் விளக்கமளித்தனர். 

பாராளுமன்ற வரவுசெலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பது, சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அவற்றை மதிப்பீடு செய்வதற்காக ஆய்வுக்குழுவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

மேலும், 10வது பாராளுமன்றத்திற்குத் தேவையான எதிர்கால உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பான விவரங்களை இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கை பாராளுமன்றத்திற்கு வழங்கக் கிடைத்த ஒத்துழைப்புத் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், பாராளுமன்றத்தின் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதில் தாம் தொடர்ந்தும் நம்பிக்கை கொள்வதாகவும் கலாநிதி பென் போவிஸ் மற்றும் டொம் சோப்பர் ஆகியோர் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இவர்கள் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பட்டியல் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது...

2024-12-09 01:56:30
news-image

புகையிரத்திலிருந்து தவறி விழுந்த சீன பெண்!

2024-12-08 22:35:00
news-image

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன்...

2024-12-08 21:41:49
news-image

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக்...

2024-12-08 19:51:50
news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்களில் சோதனை

2024-12-08 21:02:47
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01