ஐக்கியத்திற்கு எதிராக இருப்பவர்களைத் திருத்துவதற்குத் தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (14) தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
தேர்தல் காலங்களில் இளைஞர்களைக் குறிவைத்து மதுப்போத்தில்களை வழங்கும் செயற்பாடுகளைச் சிலர் முன்னெடுத்துள்ளனர்.
எனவே எதிர்காலத்தில் தேர்தல் திணைக்களம் தேர்தல் சட்டதிட்டங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்கவேண்டும்.
தமிழ்மக்கள் இந்த தேர்தலில் ஐக்கியப்பட்டிருக்கக் கூடிய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியைப் பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இருக்கும்.
ஐக்கியத்திற்கு எதிராக இருப்பவர்களைத் திருத்துவதற்குத் தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM