நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் !

14 Nov, 2024 | 06:43 AM
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து மேலும் கூறுகையில்,

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் வதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய , சப்ரகமுவ, மேல்  மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

பூகொடையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-12-08 18:50:21
news-image

அத்துருகிரியவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-12-08 18:48:52
news-image

அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை...

2024-12-08 18:46:47
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05