குசல் மெண்டிஸ் 143, அவிஷ்க 100; இலங்கை 324 -  5 விக்.

Published By: Vishnu

13 Nov, 2024 | 07:26 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (13) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரண்டாவது தடவையாக மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் தத்தமது நான்காவது சதங்களைக் குவித்து இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

இந்தப் போட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்த போதிலும் ஒரு பந்து வீசப்பட்ட நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு தடைப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்த சற்று நேரத்தில் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க (12) ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் அவிஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 206 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இதில் 9 பவுண்டறிகளும் 2 சிக்ஸ்களும் அடங்கியிருந்தன.

குசல் மெண்டிஸ் 128 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 143 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

சதீர சமரவிக்ரம 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

சரித் அசலன்க திறமையாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரது ஆட்டமிழப்புடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

பந்துவீச்சில் ஜேக்கப் டவி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிச்செல் ஹே, டிம் ரொபின்சன், நேதன் ஸ்மித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிமா சன்ரைஸ் வலுவூட்டும் ஸ்ரீலங்கா கனிஷ்ட...

2024-12-10 22:12:00
news-image

6 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண லங்கா...

2024-12-10 17:26:14
news-image

தென் ஆபிரிக்காவிடம் 2ஆவது டெஸ்டில் 109...

2024-12-09 15:38:10
news-image

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி...

2024-12-09 14:08:43
news-image

37 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஆசிய...

2024-12-09 14:01:06
news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07
news-image

இந்தியாவை 10 விக்கெட்களால் வென்ற அவுஸ்திரேலியா,...

2024-12-08 16:59:14
news-image

பிடியைத் தளரவிட்டது இலங்கை; கடைசி 6...

2024-12-07 23:20:09
news-image

அட்கின்சன் ஹெட்-ட்ரிக், டக்கெட், பெத்தெல் துடுப்பாட்டத்தில்...

2024-12-07 18:48:25
news-image

15 வயதின் கீழ் ஸ்ரீலங்கா இளையோர்...

2024-12-07 09:47:46
news-image

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை; 2ஆம் நாள்...

2024-12-06 23:00:27