(நெவில் அன்தனி)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட தரவரிசைகளில் பாகிஸ்தானியர்களான பாபர் அஸாம், ஷஹீன் ஷா அப்றிடி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையின் வனிந்து ஹசரங்க 2ஆம் இடத்தில் உள்ளார்.
அவுஸ்திரேலிய மண்ணில் 22 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2 - 1 என கைப்பற்றுவதற்கு முக்கிய பங்காற்றியவர்களில் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அவ்றிடியும் ஒருவராவார்.
அத் தொடரில் 3 போட்டிகளிலும் விளையாடிய ஷஹீன் ஷா அவ்றிடி 12.62 என்ற சராசரியுடன் 8 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியிருந்தார்.
இதனை அடுத்து சர்வதேச ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் கேஷவ் மகாராஜ், ராஷித் கான், குல்தீப் யாதவ் ஆகியோரை பின்தள்ளி ஷஹீன் ஷா அப்றிடி 686 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறினார்.
முதலாம் இடத்திலிருந்த தென் ஆபிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் (674 புள்ளிகள்) 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டார். ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கான் (687 புள்ளிகள்) தொடர்ந்தும் 2ஆம் இடத்தில் இருப்பதுடன் இந்திய வீரர் குல்தீப் யாதவ் (674 புள்ளிகள்) 3ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
இந்தியாவில் நடைபெற்ற 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின்போது பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சிறிது காலம் முதலாம் இடத்திலிருந்த ஷஹீன் ஷா அப்றிடி, இப்போது மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகியவற்றுக்கான தரவரிசைகளில் பாகிஸ்தானியர்கள் இருவர் முதல் இடத்தில் உள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெரியளவில் பாபர் அஸாம் பிரகாசிக்காத போதிலும் 825 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அவருடன் போட்டியிலிருக்கும் இந்தியர்கள் மூவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவருவதால் அதே இடங்களில் இருக்கின்றனர்.
ரோஹித் ஷர்மா (765 புள்ளிகள்), ஷுப்மான் கில் (763 புள்ளிகள்), விராத் கோஹ்லி (746 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2ஆம், 3ஆம், 4ஆம் இடங்களில் இருக்கின்றனர்.
ரி20 பந்துவீச்சு தரவரிசையில் ஹசரங்க இரண்டாம் இடம்
சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த இருவர் முதல் 5 இடங்களுக்குள் இருக்கின்றனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 6 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் வனிந்து ஹசரங்க தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 696 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனான வனிந்து ஹசரங்க, 2ஆவது போட்டியில் நொண்டியவாறு பந்துவீசி 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அவரது சக வீரர் மஹீஷ் தீக்ஷன 684 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து சுழல்பந்துவீச்சாளர் ஆதில் ரஷித் 725 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கிறார். 3ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அக்கீல் ஹொசெய்ன் (691 புள்ளிகள்) இடம்பெறுகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட், பந்துவீச்சுக்கான தரவரிசையில் தென் ஆபிரிக்காவின் கெகிசோ ரபாடா, ரி20 கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ட்ரவிஸ் ஹெட் ஆகியோர் முதலிடங்களை வகிக்கின்றனர்.
ரி20 கிரிக்கெட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க 5ஆம் இடத்தில் உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM