இயக்குநரும் நடிகருமான ராமகிருஷ்ணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வாகை' எனும் திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ராம் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வாகை' எனும் திரைப்படத்தில் ராமகிருஷ்ணன், சாந்தினி தமிழரசன், மறைந்த நடிகர் டி.பி. கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, சித்ரா லட்சுமணன், 'கருத்தம்மா' ராஜ ஸ்ரீ, 'பருத்திவீரன்' சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சாய் தேவ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லுமினாஸ் சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. ஜனார்த்தனன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இந்த திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே இயக்குநரும், நடிகருமான ராமகிருஷ்ணன் கடந்த ஆண்டு வெளியான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'லியோ' ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் பேரன்பினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM