பண்டாரகம, பொல்கொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றிருந்த நண்பர்கள் குழுவைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் ஹோட்டல் உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று பண்டாரகம, பொல்கொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் முன்பதிவு செய்து சுற்றுலாவுக்காக அங்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, இந்த ஹோட்டலுக்கு சென்ற ஹோட்டல் உரிமையாளரின் உறவினர்கள் சிலர் நீச்சல் தடாகத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் தங்களுக்கு வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.
பின்னர் இந்த ஹோட்டல் உரிமையாளர் குறித்த நண்பர்கள் குழுவிடம் ஹோட்டலை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் இரு தரப்பினர்களுக்கு இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் ஹோட்டல் உரிமையாளரும் பணியாளர்கள் சிலரும் இணைந்து நண்பர்கள் குழுவைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM