bestweb

கொட்டாவி ஆரோக்கியமானதா? இல்லையா?

13 Nov, 2024 | 05:29 PM
image

எம்மில் பலரும் அலுவலகத்தில் பணியாற்றும் தருணங்களிலும் அல்லது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் அளவளாவும் தருணங்களிலும் சில முறை எம்மையும் மீறி கொட்டாவி விடுவோம். சில முக்கியமான சந்திப்புகளின் போது சிலரால் கொட்டாவி விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்கும்.  

அதனை தடை செய்ய முயற்சித்து தோல்வி அடைவர். இந்த தருணங்களில் கொட்டாவி விடுவது ஆரோக்கியமானதா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பின் அறிகுறியா? என்ற ஐயம் எழும். இது தொடர்பாக வைத்தியர்களிடம் விளக்கம் கேட்கும் போது... அவர்கள் அளித்த பதில்களை கீழே தொடர்ந்து காண்போம். 

தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் தருணங்களில் சிசு- கொட்டாவி விடுகிறது. பொதுவாக கருவறையில் இருக்கும் சிசு -நாளாந்தம் 25 முறை கொட்டாவி விடுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரித்திருக்கிறார்கள்.  கொட்டாவியை மனிதர்கள் மட்டுமல்லாமல் செல்லப் பிராணிகளான பூனை -நாய் -பறவை- மீன்கள்- ஆகியவையும் கொட்டாவி விடுவதை நாம் கண்டிருப்போம்.‌ 

கொட்டாவி என்பது எம்முடைய சோர்வான தருணங்களை மாற்றி அமைக்கும் காரணி என்றும் கூறலாம். எம்முடைய மனமானது கவனச்சிதறலுக்கு ஆட்படுபவை.‌ கவனத்தை ஒருமுகமாக குவிக்க விரும்பினால்.. அவர்களுக்கு கொட்டாவி ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிலருக்கு காலையில் எழுந்ததும் அவர்களுடைய உடல் இயக்கம் சீரடைவதற்காக கொட்டாவி விடுவார்கள். இது இயல்பானது. 

அதே தருணத்தில் சலிப்பு உள்ளிட்ட மன அழுத்த நிகழ்வுகள் காரணமாகவும் கொட்டாவி உண்டாகும். வெகு சிலருக்கு பசி ஏற்படும் போதும் கொட்டாவி வரும்.‌ அதே தருணத்தில் எம்முடைய மூளையில் உள்ள மிரர் நியூரான்ஸ் எனும் நரம்புகள் வீரியமாக செயல்பட தொடங்கினால்.. கொட்டாவியை பற்றி கேட்டாலும், வாசித்தாலும், கொட்டாவியை பார்த்தாலும்... நாமும் கொட்டாவி விடுவோம். 

பொதுவாக நாளாந்தம் 9 முறையில் இருந்து 20 முறை வரை கொட்டாவி விடுவது இயல்பானது என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதே தருணத்தில் 15 நிமிடங்களுக்குள் மூன்று முறைகளுக்கு மேல் தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ அல்லது குறுகிய கால இடைவெளியிலோ கொட்டாவி விட்டால்.. அது உங்கள் ஆரோக்கிய கேட்டின் அறிகுறியாக இருக்கும் என குறிப்பிடுகிறார்கள். 

மயக்கம் , உறக்கமின்மை , பகல் நேர தூக்கம், சில மருந்துகளின் பக்க விளைவுகள், சில நரம்பியல் மண்டலங்களின் தவறான தூண்டுதல்கள், வலிப்பு நோய் பாதிப்பு , தலையில் காயம் ஏற்படுதல், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தகைய கொட்டாவி உண்டாகும்.

சிலருக்கு இதுபோல் அசாதாரணமான முறையில் கொட்டாவி விடும் போது இதன் காரணமாக கண், காது, தாடை, தொண்டை ...ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் கொட்டாவி என்பது இயல்பானது என்றாலும், அவை அசாதாரணமானதாக இருக்கிறது என உணர்ந்தால் ... உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து ஆலோசனையும்,  அதற்குரிய பரிசோதனையையும் மேற்கொண்டு முறையான நிவாரண சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வைத்தியர் வேணி - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56